சீனாவில் முதன்முறையாக சென்சென் நகரில் நாய்கள், பூனைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்துக் காட்டு விலங்குகளின் இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கு பிப்ரவரி மாதத்தில் தடை விதிக்கப்பட்டது.
இருந்தாலும் காட்டு விலங்குகளை இறைச்சிக்காக விற்கும் வணிகத்தைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் சென்சென் நகரில் வீட்டு வளர்ப்பு விலங்குகளான நாய்கள், பூனைகளை இறைச்சி உணவாக உட்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. சீனாவில் நாய், பூனை ஆகியவற்றை இறைச்சியாக உட்கொள்வதற்குத் தடை விதித்துள்ள முதல் நகரம் சென்சென் என்பது குறிப்பிடத் தக்கது.