கொரோனா தொற்றை கட்டுபடுத்த, சீனாவை போல், ஆஸ்திரேலிய அரசும், ட்ரோன்களை உபயோகிக்க முடிவெடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, கோல்ட் கோஸ்ட் நகரில், 2 ட்ரோன்கள் மூலம், முதல் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள், மக்கள் கூட்டங்களை ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த ட்ரோன்களில் கிருமி நாசினி தெளிக்கும் வசதியும் உள்ளது, கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.