பிரிட்டனில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களை அந்நாட்டு மக்கள் கைதட்டி உற்சாகபடுத்தினர்.
இந்தியாவில் கொரோனா தடுப்பில் ஈடுபட்டிருப்போரை கைதட்டி ஊக்கப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று மக்கள் தங்களது கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.
இதே வழியில் சிங்கப்பூர் மக்களும், வீட்டு பால்கனியில் நின்று கைதட்டி அந்நாட்டு சுகாதார ஊழியர்களை உற்சாகபடுத்தினர். அந்த வரிசையில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் பிரிட்டன் மக்கள், வீட்டுக்கு வெளியே வந்து கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.