கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பீர் தயாரிப்பு பணிகளை நிறுத்துவதாக மெக்சிகோவின் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்கு பிறகு பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் வதந்திகளால் அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெக்சிகோவில் விவசாயம் தவிர மற்ற தொழில்துறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீர் உற்பத்தியை படிப்படி குறைத்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.