உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலியில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், ஸ்பெயினில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொரொனா நோய் பெரும் பாதிப்பையும், அழிவையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 480 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததால், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விஞ்சியது. பிரான்ஸ் நாட்டில் 890 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.
இதையும் சேர்த்து உலகில் கொரோனாவுக்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதேபோல் உலகின் பல நாடுகளிலும் நேற்றும், இன்றும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் உலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் உலக வல்லரசான அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் மட்டும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த பட்டியலில் இத்தாலி 2ஆவது இடத்திலும், ஸ்பெயின் 3ஆவது இடத்திலும், ஜெர்மனி 4ம் இடத்திலும், சீனா 5ம் இடத்திலும் உள்ளன.
உலகம் முழுவதும் சிகிச்சையில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களில் 37 ஆயிரத்து 600 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.