கொரோனா தொற்றில் இருந்து தப்பிப்பதற்கு முகக்கவசம் மட்டும் போதுமானது இல்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நாட்டில் முகக்கவச தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை பணிக்குழு அதிகாரி டெபோரா பிரிக்ஸ் (Deborah Brix), நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக விலகல் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றார்.
முகக்கவசம் அணிவதன் மூலம் நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தவிர்க்கமுடியுமே தவிர, நம்மை காத்துக்கொள்ள 6 அடி விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.