கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் 76வயது முதியவர் ஒருவர் தன்னுடைய காரில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.
கில்பர்டோ பைனிடா என்ற பெயர் கொண்ட அந்த முதியவர் கடந்த ஒன்றரை வருடங்களாக தனது காரில் தான் வசித்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கொலம்பியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த முதியவரும் தன்னை காருடன் தனிமைப்படுத்தியுள்ளார்.
அவருக்கான உணவு, படுக்கை எல்லாமே இந்த காரில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.