கொரோனா பாதிப்பு பரிசோதனையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நோய் பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
புதிய பரிசோதனை உத்தியைப் பயன்படுத்தி அதிபர் டிரம்ப்புக்கு சோதனை நடத்தப்பட்டதாகவும் எந்த வித நோய்க்கூறுகளும் இல்லாமல் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்தில் பரிசோதனை முடிந்துவிட்டது என்றும் 15 நிமிடங்களில் பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது என்றும் அதற்காக காத்திருக்காமல் தாம் தமது பணிகளை கவனிக்க சென்றுவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனைகள் எப்படி செய்யப்படுகின்றன. அவரை எவ்வளவு விரைவாக அறிக்கையை அளிக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்ளவே இரண்டாவது முறை சோதனைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.