ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள உதவிகளுக்கு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பரவலை கட்டுப்படுப்படுத்தும் விதமாக உலகநாடுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவில் ஏழை மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள், 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு, நிதியுதவி என 1 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவிகளை அறிவித்துள்ள பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.