உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கியூபா, ஹைத்தி உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது.
முகக்கவசங்களை அணிந்த மக்கள், தள்ளுவண்டிகளில் கேன்கள், சிறு பாட்டில்களை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்று தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். டிரக்குகளில் வரும் தண்ணீரைப் பிடிக்க அதிகாலை முதலே காத்திருக்க வேண்டியதாகக் கூறும் மக்கள், அன்றாடப் பயன்பாட்டுக்கான தண்ணீர் மாதக்கணக்கில் கூட கிடைக்காமல் தவிப்பதாகக் கூறுகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்ற நிலையில், குடிக்கவே தண்ணீர் இன்றி அல்லல்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.