வருகிற அக்டோபர் மாதத்துடன் விசாக்காலம் முடிவடையும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவர்களுக்கு, விசா செல்லுபடிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பணிகளில் மருத்துவர்களின் பங்களிப்பு தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய சுகாதார சேவை அமைப்பின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விசா செல்லுபடிக்காலம் தானாகவே ஓராண்டு நீட்டிக்கப்படும் என இங்கிலாந்து அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் உள்ளிட்ட 2800 மருத்துவ பணியாளர்கள் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.