கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்ற பிறகும் அந்த இடங்களில் காற்றில் கொரோனா வைரசுகள் பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நெப்ராஸ்கா (Nebraska) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் வராந்தாக்களிலும் கொரோனா வைரசுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து காற்றின் வாயிலாகவும் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை எந்த மருத்துவ இதழிலும் வெளியிடப்படவில்லை.
எனினும் காற்றிலும் கொரோனா நீடிக்கும் என்ற ஆய்வு தகவலை அடுத்து கொரொனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடல் கவச ஆடைகள் மிகவும் அத்தியாவசியம் என்ற கருத்து வலுத்துள்ளது.