ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர், ஈரான் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
இவர்களையும் சேர்ந்து ஈரானின் கொரோனா தொற்று எண்ணிக்கை 44 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில் 141 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் 3 ஆயிரத்து 703 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், 14 ஆயிரத்து 656 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.