கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் Skype வீடியோ அழைப்புகளின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பலர் தங்களது உற்றார் உறவினர்களை வீடியோ அழைப்புகள் வாயிலாக தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் நடத்துகின்றனர்.
இதை அடுத்து Skype அழைப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனம் blog post ல் தெரிவித்துள்ளது.
இதே போன்று Zoom Video Conferencing போன்ற சேவைகளின் பயன்பாடும், வீடியோ கேம்களின் தரவிறக்கமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.