கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஏழாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் முதலீட்டில் அமெரிக்க அரசுடன் இணைந்து தனது அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் இந்த மருந்தை மனிதர்களுக்குக் கொடுத்து சோதனை செய்ய உள்ளதாகவும், அதன்பின் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபாட், 5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் சிறிய கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், ஆய்வுக்குப் பின் இது விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மிகச் சிறிய இந்தக் கருவியைத் தேவைப்படும் இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும் எனவும் அபாட் தெரிவித்துள்ளது.