இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்ட நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பில் இருந்த அதிகாரிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.