கொரோனா பரவல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய அதிபரின் அலுவலகமான கிரம்ளின் மாளிகை அதிகாரிகள், கொரோனா பாதிப்பு குறித்து இரு அதிபர்களும் கவலையுடன் பேசியதாகத் தெரிவித்தனர்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்தும், பரஸ்பரம் கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர்கள் மூலம், உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலை குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கிரம்ளின் மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு புதின் கோரியதாகவும் கூறப்படுகிறது.