அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் பாதுகாப்புக்கான கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹாரி தம்பதி கனடாவில் நிரந்தரமான குடியேறியதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து ராணி மற்றும் அரசக்குடும்பத்துக்கு தான் சிறந்த நண்பன், அபிமானி என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அதிபர் ட்ரம்ப், அரசக்குடும்பத்தை விட்டு வெளியேறிய ஹாரி தம்பதியின் பாதுகாப்புக்கான செலவை அமெரிக்கா ஏற்காது என்று தெரிவித்துள்ளார்.
அரசிடம் உதவி கோரும் எண்ணம் இல்லை என இதற்கு ஹாரி தம்பதியின் செய்திதொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.