கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், எந்த வித பதற்றமும் இன்றி வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் துறைமுக நகரமான வொன்சானில்(Wonsan) இருந்து 30 கிலோ மீட்டர் உயரம் சென்று தாக்கக் கூடிய குறுகிய தொலைவு ஏவுகணைகள் ஜப்பான் கடல்நோக்கி சோதனை செய்யப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் தலைமையில் வழக்கமாக நடைபெறும் சோதனை, இந்த முறை ஆளும் கட்சி துணைத் தலைவர் ரி பியோங் சோல் முன்னிலையில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு குறித்த எந்த தகவலும் தெரியாதநிலையில், இந்த மாதத்தில் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திநிறுவனங்கள் கூறுகின்றன.