தனிமைப்படுத்தலுக்கு எதிராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதிவிட்ட 2 பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
கொரோனா ஒரு வகையான காய்ச்சல் என்றும் அதற்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதிபர் போல்சனாரோ வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்ய விரும்புவதாகவும், நோயால் இறப்பதற்கு பதில் பட்டினியால் இறந்து விடுவோம் என்றும் பொதுமக்கள் கூறும்வகையில் 2 வீடியோக்களை போல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோக்கள் பொதுசுகாதார அறிவுறுத்தலுக்கு முரணான கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் கொரோனா குறித்த தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும் என்றும் கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.