கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பிரிட்டன் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும், வெளியே வரக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரிய முன்னேற்பாடுகளை செய்து, விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால், குறைந்த எண்ணிக்கையிலேயே உயிரிழப்பு நேரிடும், இயல்பு வாழ்க்கையும் விரைவில் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதம் பிரிட்டன் முழுவதும் உள்ள 3 கோடி வீடுகளுக்கும் அடுத்த வாரம் அனுப்பப்படவுள்ளது.