வெனிசுலா நாட்டில் கராகஸ் பகுதியில் பெட்ரோலுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சூழ்நிலை காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வெனிசுலா அரசாங்கம் நாடு தழுவிய அளவில் தனிமைப்படுத்தலை அமல்படுத்தி உள்ளதால் இந்த நிலை எழுந்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாகவும் வெனிசுலாவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் பிரச்னை காணப்படுகிறது.
எரிவாயு நிலையங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உணவு,மற்றும் மருந்து விநியோகஸ்தர்கள், பாதுகாப்பு படைகள்மற்றும் அவசர நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.