தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், திரைப்படத்தை தங்களது கார்களுக்குள் அமர்ந்தபடியே காண ஏதுவாக விளையாட்டு மைதானம் ஒன்று திறந்தவெளி திரையரங்காக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி மக்களுக்கு தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் திரையரங்குக்கு செல்ல முடியாமல் இருக்கும் மக்கள், சொந்த கார்களில் வந்து, பிறகு அதற்குள்ளேயே அமர்ந்து படம் பார்க்க சியோல் விளையாட்டு மைதானம் திறந்தவெளி திரையரங்காக மாற்றப்பட்டுள்ளது.