உலகின் மொத்தக் கச்சா எண்ணெய்த் தேவை ஒரு நாளைக்கு ஒரு கோடி பீப்பாய்கள் குறைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் இருபது டாலர் என்கிற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் வணிகத்தில் சவூதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே நிலவும் கடும் போட்டியால் ஏற்கெனவே விலை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையால் உலகின் கச்சா எண்ணெய்த் தேவை ஒரு நாளைக்குப் பத்துக் கோடி பீப்பாய் என்பதில் இருந்து ஒன்பது கோடி பீப்பாயாகக் குறைந்துள்ளது.
தேவை குறைந்துள்ளதாலும், வணிகப்போட்டியால் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்கப் போதிய கிடங்குகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் இருபது டாலர் என்கிற அளவில் உள்ளது.