தென் ஆப்ரிக்காவில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உலகின் தங்க நகரம் என்றழைக்கப்படும் ஜோகன்ஸ்பர்கில், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து, மிகப்பெரும் வர்த்தக நகரான ஜோகன்ஸ்பர்கின், முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மேலும், ராணுவமும், காவல்துறையும், வீடில்லாதவர்களை, வீதிகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தற்போது உணவு வாங்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும், வீட்டை விட்டு வெளியேற மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.