கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மலிவு விலை மற்றும் அதிவேக பரிசோதனை
குறித்த ஆராய்ச்சியில் பிரேசில் அறிவியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ பல்கலைக்கழக பொறியியல் மற்றும் உயிரியல் துறைகளின் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை முறையை உருவாக்கி வரும் ஆராய்ச்சியாளர்கள், ரத்த மாதிரிகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியவதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
இதுபரிசோதனை செலவை நான்கு மடங்கு வரை குறைக்கும் என்றும் சில மணி நேரங்கள் அல்லது நிமிடங்களில் முடிவுகளை பெறலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.