கொரோனா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.
சீன அரசுக்கு சொந்தமான சிசிடிவி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்பும், ஜீ ஜின்பிங்கும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், தாமும், ஜீ ஜின்பிங்கும் கொரோனா விவகாரத்தில் இணைந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து சீனா அதிகம் புரிந்து வைத்திருப்பதாகவும் அந்த பதிவுகளில் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்து முன்பு கருத்து தெரிவிக்கையில் சீனா வைரஸ் என டிரம்ப் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
தற்போது தனது பதிவுகளில் சீனா வைரஸ் என அவர் குறிப்பிடவில்லை.