ஈராக்கின் பாதுகாப்பு மிக்க பசுமை பிரதேசத்தில் ராக்கெட்டுகள் தாக்கின. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்பு படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் நிலையில் இந்த தாக்குதல்கள் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
தற்போது சுமார் 7 ஆயிரத்து 500 கூட்டுப் படைகள் உள்நாட்டு ராணுவத்துக்கு துணையாக ஜிகாதி தீவிரவாதக் குழுக்களுடன் சண்டையிட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் முதல் அமெரிக்க தூதரகம் போன்ற வெளிநாட்டு கட்டடங்களை குறிவைத்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை.