கோவிட் 19 நோய்க்கு ரத்தம் கட்டுவதை நீக்கும் மருந்துகள் பயன்படலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகளில் மாரடைப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்டும் tissue plasminogen activator என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள சில மருத்துவனைகள் இந்த மருந்தின் தாக்கம் எத்தகையது என்று ஆய்வு செய்து வருகின்றன. ரத்தம் கட்டுவதைத் தடுக்கும் இத்தகைய மருந்து கோவிட் 19 நோய்க்கு எதிராக பயன்படலாம் என்று அண்மையில் ஆய்வேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் உறுப்புகள் செயலிழக்கும் போது வெண்டிலேட்டர்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த மருந்து உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.