கொரோனா அச்சுறுத்தலால் வரலாறு காணாத அளவு சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால், தனது மதுபான ஆலைகளில் ஒன்றை சானிடைசர் தொழிற்சாலையாக பிரேசில் பீர் தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பங்களிப்பை அளிக்குமாறு பிரேசில் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அம்பேவ் எஸ்.ஏ. பீர் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரத்தில் 5 ஆயிரம் சானிடைசர்களை வழங்கியுள்ளது.
பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆல்கஹால் கொண்டு இந்த சானிடைசர்களை தயாரித்து பாட்டில்களில் அடைத்து விநியோகம் செய்து வருகிறது.