கொரோனா வைரஸை எதிர்கொள்ள போதிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனை மேற்கொள்வதில் உலகின் முக்கிய பரிசோதனைக்கூடங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோரின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிவதன் மூலம், அவர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கலாம் என்றும் சிகிச்சை அளிப்பது எளிமையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும், சோதனைகள் எவ்வளவு துல்லியமானவை என்ற பல கேள்விகள் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கலிஃபோர்னியாவின் பயோமெரிக்கா இன்க், தென் கொரியாவின் சுகென்டெக் இன்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ரத்த பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.