ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவகையான வெளிநாட்டு உதவிகளும் தேவையில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரான்சைத் தளமாகக் கொண்டு செயல்படும் எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கம் சார்பில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க ஒன்பது பேர் கொண்ட குழு மற்றும் உபகரணங்களை அனுப்ப திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாள, வைரசுக்கு எதிராக ஈரான், தேசிய அளிவில் மிகப் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதாகவும், எனவே வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.