கொரோனா அச்சுறுத்தலால், கொலம்பியாவில் சிறைச்சாலைகளில் வெடித்த கலவரத்தில் 23 கைதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகிறது. இந்த நிலையில், சிறைச்சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், கொரோனா பரவும் அச்சம் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிலர் சிறையை உடைத்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.