கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே, ஈரானில் அதிவேகமாக வைரஸ் பரவுவதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, இத்தாலிக்கு அடுத்த படியாக ஈரானில் தான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இதுவரை 1,556 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே ஈரான் தடை விதித்த போதும், ‘மஹான் ஏர்’ எனும் தனியார் நிறுவனம் மட்டும் சீனாவுக்கு தொடர்ந்து சேவை அளித்து வந்துள்ளது.
அந்நிறுவன விமானி ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், காஸ்பியன் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடி நவ்ரூஸ் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.