சில ஆப்பிரிக்க நாடுகள் முதன்முதலாக கொரோனா பாதிப்பை அறிவித்துள்ளன.
அந்நாடுகளில் உள்ள பலவீனமான சுகாதார சூழ்நிலைகளால் தொற்று வேகமாகப் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருப்பதால் எல்லைகளை மூட அந்நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆப்பிரிக்க கண்டத்தின் 30 நாடுகள் அதன் சரிபாதி பங்கு எனலாம் அவை இப்போது 400க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு சிகிச்சையளித்து வருகின்றன. தான்சானியா, லிபேரியா, பெனின், சோமாலியா ஆகிய நாடுகள் முதன் முதலாக கொரோனா பாதிப்பை அறிவித்துள்ளன.
ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை சுமார் 130 கோடியாகும். இதனால் இதை லேசாக கருத முடியாது என்று கருதும் ஆப்பிரிக்கர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி போன்றவை வழங்கும் நிதி உதவிகளால் மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.