பாகிஸ்தானில் முழு ஊரடங்கை அறிவிக்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் அன்றாடக் கூலியை நம்பியிருப்பதால் முழு அடைப்பு சாத்தியமில்லை என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்திலிருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல், போன்றவற்றை வரவேற்பதாக கூறிய அவர், தேவையற்ற செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ள இம்ரான் கான் மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே சிந்து மாகாணத்தில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிந்துவில் 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது .
கராச்சியில் 123 பேரும் சுக்குர் பகுதியில் 210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.