இலங்கையில், கொரோனா வதந்தி காரணமாக ஏற்பட்ட சிறைக் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 கைதிகள் உயிரிழந்தனர்.
அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா உள்ளதாக சக கைதிகளிடையே வதந்தி பரவியது. இதனால், சிறையிலிருந்து தங்களை வெளியேற்றக்கோரி கைதிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சில கைதிகள் சிறையைவிட்டு வெளியேறும் முயற்சியாக கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.