சைப்ரஸ் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ட்ரோன் கேமரா கண்காணிப்பின் கீழ் நாய் ஒன்று வாக்கிங் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் செல்லப்பிராணிகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வுக் காணும் விதமாக லிமாசோல் நகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், ட்ரோன் கேமரா கண்காணிப்பில் ஆளில்லா சாலையில் நடைபயிற்சி செய்ய தனது நாயை அனுமதித்துள்ளார்.
அதன் கழுத்துடன் கயிறால் கட்டப்பட்ட ட்ரோனை வீட்டின் உள்ளே இருந்து இளைஞன் இயக்கும் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.