வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது. சீனாவில் உள்நாட்டு பரவல் கட்டுக்குள் வந்து விட்டது.
இரண்டாவது நாளாக இன்று அங்கு உள்நாட்டவர் இடையே புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை .ஆனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக இப்போது அங்கு 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து பயண கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார சோதனை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீன அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் படித்து நாடு திரும்பும் மாணவர்கள் வாயிலாக கொரோனா தொற்று இறக்குமதியாகிறது.
இவர்களில் பெரும்பாலோனோர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பலவேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதால் சீனாவில் புதிய கொரோனா அலை வீசி விடுமோ என்ற அச்சம் சீன சுகாதார அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.