கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலர் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரோஜாக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மலர்களின் தேவை குறைந்துள்ளது.
இதன்விளைவாக 70 சதவீத ஏற்றுமதி பாதிக்கப்பட்டு கென்யா தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.