கொரோனா வைரஸ் காட்டுத் தீயைப் போல் பரவ விட்டால் அது பல லட்சம் பேரைக் கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் (antonio guterres) உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா குறித்து மென்பொருள் வழியிலான முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 75 ஆண்டுக்கால ஐநா.வின் வரலாற்றில் இத்தகைய உலக சுகாதார பிரச்சினையை சந்தித்தது இல்லை என்று கூறினார்.
உலகளாவிய தொற்று என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவை எதிர்க்க உலகின் வல்லரசு நாடுகள், பொருளாதார வலிமை மிக்க நாடுகள் ஒன்றுபட்ட உறுதியான கொள்கையுடன் போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.