கொரோனா பாதிப்பு மிக்க நாடுகளுக்கு செல்லாத போதும் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அதன் சமூகப் பரவல் கட்டம் தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
போதுமான அளவுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தொற்று நோயான கொரோனா எத்தனையோ குழுக்களிடம் பரவ வாய்ப்புள்ளது. 134 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டில் மாதிரி அளவுக்குக் கூட நாம் பரிசோதனைகளை நடத்தவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பரிசோதிக்கப்படாத நபர்களால் இந்த தொற்று நோய் மேலும் பலருக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த சங்கிலியை அறுப்பது சாத்தியமில்லாமல் போகிறது.
அறிகுறிகள், பாதிப்புகள் உடையவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி தொற்று பிறருக்குப் பரவாமல் தடுப்பதற்கு நாம் அவசரமாக செயல்பட வேண்டியுள்ளது என்று WHO அமைப்பின் தென் கிழக்காசிய மண்டல இயக்குனரான பூனம் சிங் எச்சரித்துள்ளார்.