கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என தெரியவந்துள்ளது.
கொரோனா பீதியால் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்து, இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.