கொரோனாவை எதிர்த்துப் போராட தேவையான அவசர நிதியை வெனிசுலாவுக்குத் தர சர்வதேச நிதியம் மறுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்றாலும் 36 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். முன்னதாக அங்கு அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய எதிர்க்கட்சி தலைவர் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார்.
ஆனால் அந்நாட்டின் ராணுவம் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத்தடையால் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து போராட தங்கள் நாட்டுக்கு 5 பில்லியன் டாலர் நிதியை கடனாக வழங்கும்படி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சர்வதேச நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நிதியம் அறிவித்துள்ளது.