வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தும் போது 6 மணி நேரம் காத்திருக்க நேர்வதாக பயணிகள் புகார் அளித்ததையடுத்து புதிய விதிகளை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் விமான நிலையத்தில் காத்திருக்கும் வீடியோக்களை பயணிகள் வெளியிட்டு வந்தனர். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பயணிகளை ஒரு பொது அரங்கில் மணிக் கணக்கில் அமர வைத்திருப்பதும் கொரோனாவை பரப்புவதற்கு காரணமாகி விடும் என சிலர் சுட்டிக் காட்டினர்.
இதனால் புதிய விதிகளின் படி பயணிகள் 30 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு 5 பாதுகாவலர்களுடன் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் . பரிசோதனைகள் முடியும் வரை பாஸ்போர்ட் திருப்பித் தரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய் பரவிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் 30 -40 நிமிட இடைவெளி விட்டு தரையிறக்கப்படுவதால் காத்திருப்பு நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.