கடந்த 18 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உலகம் முழுவதும் பலநாடுகளில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டு வருகிறது. வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருப்பதால் பொருளாதார அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கி விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கச்சா விலை பேரலுக்கு 20 புள்ளி 37 டாலருக்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் 56 சதவீத இழப்பை சந்தித்துள்ளன.