உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தால், பல நாடுகள் பீதியில் உறைந்துள்ள நிலையில், பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் வெறிச்சோடி கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் -மலேசியாவை இணைக்கும் உட்லேண்ட் காஸ்வே சாலை, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா, அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னியின் ஹாலிவுட் ஸ்டுடியோ, இத்தாலி மிலன் நகரில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தேவாலயங்கள், சீனாவின் வூகான் விமான நிலையம், மருத்துவமனைகள் வெறிச்சோடி கிடக்கும் சேட்டிலைட் காட்சிகள், கெரோனாவின் தாக்கத்தை சொல்லாமல் சொல்கிறது.