கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக தனது எல்லைகளை அடுத்த 30 நாடுகளுக்கு மூடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எந்த விதமான தியாகத்திற்கும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வரை வெளிநாட்டவரின் பயணத் தடை என்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பல இப்போது தங்களுக்குள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பள்ளி, கல்லூரி, உணவு விடுதிகள் , கடைகள் என அனைத்தையும் மூடியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைகளை மூடி விட்டாலும், உறுப்பு நாடுகளுக்குள் மக்கள் தடையின்றி சென்று வரலாமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.