அமெரிக்காவில் தனது மனைவிக்கு கணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் 67வது திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நான்சி ஷெல்லார்டு ((Nancy Shellard)) எனும் பெண்மணி ஒருவர் வெர்னன் எனும் பகுதியிலுள்ள நர்சிங் ஹோமில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாப் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்கு நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார்.
அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நர்சிங் ஹோம் வளாகத்தில் நின்றுக்கொண்ட பாப், 67 வருட காதலை நினைவுக்கூரும் வகையிலான வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி நின்றார். இதனை முதல் தளத்தில் இருந்த பார்த்த அவரது மனைவி உற்சாகத்துடன் அங்கிருந்தவாறே கை அசைத்தார்.