ஜப்பானில் முதன்முறையாக பாரம்பரிய குதிரை சவாரியில் ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்படவுள்ளது. பல கிலோ எடையுள்ள பாரத்தை இழுத்துச் செல்லும் குதிரைகளுக்கு இடையே பனெய் கீபா(Banei keiba) என்ற பந்தயம் நடத்தப்படுகிறது.
இதில், பயிற்சியாளர்கள் வழிநடத்த, முதலில் இலக்கை அடையும் குதிரை வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ(Hokkaido) தீவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இந்த பாரம்பரிய குதிரை பந்தயம் கவுரவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் பனெய் கீபா குதிரை ஒன்றில் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் செல்லப்படும்.